எஸ்.ஐ.ஆர். பணியை எதிர்த்து கேரள அரசு வழக்குகேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.கேரளாவில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தமும், உள்ளாட்சித் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இது, அவசர முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று கூறியதுடன், உத்தரவை இன்று பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது.