தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பாசன வாய்க்காலை விவசாயிகள் தூர்வாரினர். பாசன வாய்க்காலில் செடிகள், ஆகாயத்தாமரை செழித்து வளர்வதால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. பாசன வாய்க்காலை தூர்வார வேண்டுமென அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ராஜா மடம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்களாகவே உயிரை பணயம் வைத்து வாய்க்காலை சுத்தம் செய்தனர்.