காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமையை ஒட்டி வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது. மேளதாளம், சிவ வாத்தியங்கள் முழங்க வெள்ளித்தேரில் வள்ளி, தெய்வயானையுடன் சுப்ரமணிய சுவாமி உலா வந்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, திருப்பணி துணியில் சிக்கி வெள்ளித் தேரின் உச்சிக்குடை உடைந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.