"16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை" | சமூகவலைத்தளம் மூலம் நிகழ்ந்த கொடூரம்..
Harassment | "16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை" | சமூகவலைத்தளம் மூலம் நிகழ்ந்த கொடூரம்..போக்சோவில் சிக்கிய இளைஞர்
புதுக்கோட்டையில்16 வயது சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் சமூக வலை தளம் மூலம் அறிமுகமாகி பேசி வந்த இளைஞர், சிறுமியிடம் ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை கலீப் நகரை சேர்ந்த 25 வயது இளைஞர் முகமது பைசலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.