நீக்கியதும் எதிர்பாரா ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன் - ஈபிஎஸ்க்கு `1000’ ஷாக்
1000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டத்தை கண்டித்து, கோபிசெட்டிப்பாளையத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதிமுக பழைய வலிமையை பெற வேண்டும் என்றுதான் செங்கோட்டையன் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள், அதற்காக கட்சிப்பதவி நீக்கப்பட்டதை எதிர்ப்பதாக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். “கட்சி ஒன்று பட்டால் பதவியில் நீடிப்போம்“ என ராஜினாமா கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.