டேட்டிங் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து 2.5 பவுன் நகை கொள்ளை
திருப்பூரில் டேட்டிங் ஆப்பான கிரைன்டர்(grindr) செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, 2.5 பவுன் நகை மற்றும் ரூபாய் 30 ஆயிரத்தை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப்பார்க்கும் பிரசன்னா என்ற இளைஞர், கிரைன்டர்(grindr) செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு ஆண்களை தேடியதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த செயலி மூலமாக ஒருவர் அறிமுகமாகி காட்டுப்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு சந்திக்க வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற பிரசன்னாவிடம், அங்கு இருந்த 2 இளைஞர்கள் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு ஓடினர். பிரசன்னா அளித்த புகாரின் பேரில் போலீசார் அபிநிவாஸ் மற்றும் மனோஜ்குமார் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்