ரோட்டில் கிடந்த பணம்.. வறுமையிலும் சிறுவன் செய்த செயல் - குவியும் பாராட்டு
கன்னியாகுமரி அருகே வறுமையிலும் நேர்மை தவறாமல் சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் சேர்த்த பள்ளிச் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. களியல் பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர், கணவனால் கைவிடப்பட்டு தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 10ம் வகுப்பு படித்து வரும் அச்சிறுவன் தாயாருக்கு மருந்து வாங்க சென்றுபோது சாலையோரம் கிடந்த பணத்தை கண்டு, அதை எடுத்து சென்று காவல்நிலையத்தில் கொடுத்து உள்ளார். இதையடுத்து பணத்தை தவறவிட்டவரை காவல்நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் அந்த 23 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை உரியவரிடம் ஓப்படைத்தனர்.