Savukku Shankar | TN Police | வீட்டின் பூட்டை உடைத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

Update: 2025-12-13 13:07 GMT

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த மிரட்டல் வழக்கு விசாரணை தொடர்பாக, இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சென்ற போலீசார், அவர் கதவை திறக்காத நிலையில், பூட்டை உடைத்து உள்ளே சென்று கைது செய்தனர். சவுக்கு சங்கரின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆவணங்களை சோதனை செய்த பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்