வாழ்க்கை கொடுத்த குடும்பத்தையே கருவறுக்க முயன்ற அருள்வாக்கு சாமியார் - யூகிக்க முடியா காரணம்
தற்கொலைக்கு முயன்ற 6 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர்
கடன் தொல்லையா ? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என கீழ்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தொல்லை காரணமாக தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சம்பவம் இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் மேலும் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில் பல வருடங்களாக வாக்கு சொல்வது செய்து வருகிறார் என்றும் உள்ளூர்களே அவருக்கு தெரிந்தவர்கள் வெளியூர் தெரிந்தவர்கள் என ஒரு கோடி வரை கடன் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது