மாணவர்களுக்கு பாலியல் டார்ச்சர்.. நண்பருடன் பாதிரியார் அரெஸ்ட்.. சமயபுரத்தில் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் விடுதி மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் பாதிரியாரின் நண்பர் மற்றும் பாதிரியாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சமயபுரம் பகுதியில் உள்ள மாணவர்கள் தங்கும்
விடுதியின் இயக்குனராக பாதிரியார் குழந்தைநாதன் உள்ள நிலையில், அவரது நண்பரான சுந்தர்ராஜ் விடுதியில் வந்து தங்கி ஏழு மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இது குறித்து பாதிரியாரிடம் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில், குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.