குழந்தைகள் அபாய பயணம்... பின்புற கண்ணாடி இல்லாமல் இயங்கும் பிரபல ஸ்கூல் பஸ்... அதிர வைக்கும் காட்சி
சேலம் அருகே தனியார் பள்ளி பேருந்தின் பின்புறம் கண்ணாடி இல்லாமல் இயக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவர்கள் ஆபத்தை உணராமல் எட்டிப் பார்த்தவாறும், கைகளை வெளியில் நீட்டி கொண்டும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இவ்வாறு தான் பேருந்தை இயக்க சொல்கிறார்களா? என்று ஓட்டுனரிடம் கேள்வி கேட்டபோது வாகன மேற்பார்வையாளர் வழிகாட்டுதலின்படியே வாகனங்கள் இயக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் பள்ளிக்கல்வி துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை விடுத்துள்ளார்.