Salem | Police | Viral Video | சேலத்தில் அடுத்த அதிர்ச்சி.. காவலரை கடுமையாக தாக்கிய தந்தை, மகன்

Update: 2025-08-07 04:21 GMT

Salem | Police | Viral Video | சேலத்தில் அடுத்த அதிர்ச்சி.. காவலரை கடுமையாக தாக்கிய தந்தை, மகன்

சேலத்தில், விசாரணைக்கு அழைக்க வந்த முதல்நிலை காவலரை தாக்கிய தந்தை, மகன் ஆகிய 2 பேர் தலைமறைவாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி அருகேயுள்ள லட்சுமண கவுண்டனூரில் வசிக்கும் கந்தசாமி மற்றும் செல்லம்மாள் ஆகிய 2 தரப்பினர் இடையே மோதல் நிலவி வந்தது. இது குறித்து செல்லம்மாள் தரப்பில் அளித்த புகாரின் பேரில், முதல்நிலை காவலர் சாகித் கந்தசாமி மற்றும் அவரது மகன் வேலுமணியை விசாரணைக்காக காவல்நிலையம் வரும்படி அழைத்தார். அப்போது, மதுபோதையில் இருந்த இருவரும் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து சாகித் அளித்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்