Salem | ரூ.4 லட்சத்திற்கு ரூ.30 லட்சம் வட்டி.. ``இன்னும்15 லட்சம் கேக்குறாங்க'' - பயத்தில் குடும்பம்
Salem | ரூ.4 லட்சத்திற்கு ரூ.30 லட்சம் வட்டி.. ``இன்னும்15 லட்சம் கேக்குறாங்க'' - உயிர் பயத்தில் குடும்பம்
சேலத்தில் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி, வட்டியாக முப்பது லட்சம் ரூபாய் வரை கட்டியபோதும் தங்களை கொன்றுவிடுவேன் என கடன் கொடுத்தவர் மிரட்டுவதாக காய்கறி வியாபாரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த பெருமாள் - மீனா தம்பதியினர், காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவசர தேவைக்காக அழகாபுரத்தை சேர்ந்த ராமுவிடம் 4 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். பெற்ற பணத்திற்கு மேலாக 30 லட்சம் வரை பணம் கட்டியதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் கடனை அடைக்கவில்லை, இன்னும் 15 லட்சம் தர வேண்டும் என கூறி, அடி ஆட்களுடன் ராமு நாள்தோறும் மிரட்டி வருவதாகவும், கந்துவட்டி கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.