சம்பள பணம் பாக்கி.. உடன் வேலை பார்த்தவரை கொடூரமாக கொன்ற நபர் சென்னையில் அதிர்ச்சி
சென்னை திருவேற்காட்டில் சம்பள பண விவகாரத்தில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு, செல்வ கணபதி நகர் பகுதியில் உள்ள முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், இறந்த நபர் பெயிண்டிங் வேலை செய்யும் தண்டபாணி என்பது தெரியவந்தது. சம்பள பணத்தை பாக்கி வைத்ததால், உடன் வேலை பார்த்த சுடலை என்பவரே கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுடலையை போலீசார் கைது செய்தனர்.