உல்லாசத்துக்கு `நோ’ சொன்னதால் பிடித்த வெறி.. உடல் பாகத்தை கல்லால் சிதைத்த கள்ளக்காதலன்
Secret Love | உல்லாசத்துக்கு `நோ’ சொன்னதால் பிடித்த வெறி.. உடல் பாகத்தை கல்லால் சிதைத்த கள்ளக்காதலன்
பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் - கட்டிடத் தொழிலாளி கைது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கடந்த 17ஆம் தேதி, தலையில் காயங்களுடன், கை கால்களைச் சேலையால் கட்டிய நிலையில், ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவருடன் தகாத உறவில் இருந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் டி.பி.சாலை பகுதியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்ததும், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், கார்த்திக்கும் மணிமேகலையும், அடிக்கடி பைக்கில் வெளியே சென்று மது அருந்தி தகாத உறவில் இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று இதேபோல மது அருந்தியதாகவும் தெரிய வந்தது. அப்போது தனது ஆசைக்கு இணங்க மறுத்த மணிமேகலை, மனைவியிடம் கூறிவிடுவேன் என மிரட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கல்லால் அடித்து கொன்றதாக கார்த்திக் வாக்குமூலம் அளித்தார். இதை அடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.