தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் முன்பு உள்ள கடற்கரையில் இரண்டாவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, கடற்கரையில் பக்தர்களை பாதுகாப்பாக நீராட போலீசார் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும் பக்தர்கள் கடலில் குழந்தைகளுடன் நீராடினர்.