அச்சுறுத்தும் ராட்வீலர் - புது பிளானோடு சென்னை மாநகராட்சி
சென்னையில் அச்சுறுத்தும் ராட்வீலர் உள்ளிட்ட நாய்களை தடை செய்வது (அ) அவற்றை முறைப்படுத்தக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்த விசாரணையில், நாய்கள் மக்களை தாக்குவதை கட்டுப்படுத்துவது குறித்தத் திட்டம் தயாராக இருப்பதாக கூறிய சென்னை மாநகராட்சி தரப்பு..
அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இது பற்றி தலைமை கால்நடை அதிகாரி ஆக.12ம் தேதி ஆஜராகி விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.