நடிகர் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது... புதிய படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்ததால் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப் பட்டார். தற்போது மருந்தை உடல் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் ரோபோ சங்கர் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.