Kovai | Fire | TN Police | மினி லாரியில் `தீ'.. உள்ளே கரிக்கட்டையாக உடல் - கோவையில் அதிர்ச்சி
மேட்டுப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி தீப்படித்து எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் வாகனத்திற்குள் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். ஓடந்துறை ஆற்றுப்பாலம் அருகே ஹக்கீம் என்பவருக்கு சொந்தமான மனி லாரி திடீரென தீப்படித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது வாகனத்திற்குள் கருகிய நிலையில் சடலம் ஒன்று இருப்பது தெரியவந்தது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.