Chennai | Police | சீறி பறந்த கார்.. விடாமல் விரட்டிய போலீஸ்.. சென்னையை பதற வைத்த சேஸிங் - பகீர் பின்னணி

Update: 2026-01-25 07:46 GMT

60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டதாக கூறி பணியாளரை கடத்தி சென்று தாக்கிய மெக்கானிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் சாலையில் இளைஞர் ஒருவர் காரில் கடத்தி செல்லப்படுவதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், கடத்தி சென்ற காரை செங்குன்றம் அருகே போலீசார் சுற்றி வளைத்தனர்.. அப்போது நடத்திய விசாரணையில் கடத்தலுக்கான காரணம் அம்பலமானது... செங்குன்றத்தை சேர்ந்த அஸ்லாம் என்பவரின் மெக்கானிக் கடையில் வேலை பார்த்த சரவணன், கல்லாவில் இருந்து 60 ஆயிரம் பணத்தை திருடி விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஸ்லாம் தனது நண்பர்கள் உதவியுடன் இன்ஸ்டாவில் பெண் போல் சரவணனிடம் பேசி கிளாம்பாக்கம் வரவழைத்துள்ளார். பின்னர் வண்டலூர் அருகே இருப்பதாக கூறி அங்கே வரவழைத்த இஸ்லாம், சரவணனை கடத்தி வந்து தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அஸ்லாம் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்