RTO வீட்டில் கொள்ளை | திட்டம் போட்டு கொடுத்த டிடெக்டிவ் ஏஜென்ட்கள் கைது
சேலம் தம்மம்பட்டி அருகே ஓய்வுபெற்ற R.T.O. அதிகாரி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் கோவையை சேர்ந்த டிடெக்டிவ் ஏஜென்ட்கள் என்பதும் கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. எனினும் முக்கிய குற்றவாளிகள் சிக்காத நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.