பயோமைனிங் முறையில் திடக்கழிவுகள் அகற்றம் - 97.29 ஏக்கர் நிலம் மீட்பு

Update: 2025-09-01 02:09 GMT

சென்னையில் இதுவரை 43.33 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மா நகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் சேர்த்து நாள் ஒன்றுக்கு 6300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 43.33 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி 97.29 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்