Ranipettai | இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி
பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் வழுக்கி விழுந்து 8 வயது சிறுவன் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் கல்பலாம்பட்டு கிராமத்தில் 8 வயதான சிறுவன், தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து உயிரிழந்தார். உமாபதி என்பவரது மகன் சந்தோஷ் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது பள்ளி தோழன் கதிரவனுடன் இயற்கை உபாதை கழிக்க சென்றதாக தெரிகிறது. அங்கே தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், சமீபத்தில் பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன் சந்தோஷ், பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.