Ranipet | ஏழை மாணவிக்கு கல்வி நிதி உதவி வழங்கி எஸ்.எம்.சுகுமார் சொன்ன வார்த்தை

Update: 2025-08-06 05:52 GMT

Ranipet | ஏழை மாணவிக்கு கல்வி நிதி உதவி வழங்கி எஸ்.எம்.சுகுமார் சொன்ன வார்த்தை

ராணிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மோகன்.... மாட்டு வண்டியில் சுமை ஏற்றும் கூலித்தொழிலாளியான இவரது மகள் மதுமிதா பி.எஸ்.சி.நர்சிங் படித்து வருகிறார். ஏழ்மையான சூழலால் பல்வேறு இன்னல்களுக்கு இடையே அவர் கல்வி பயின்று வரும் நிலையில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், கல்வி நிதியுதவியாக 25 ஆயிரம் ரூபாயை தனது சொந்த நிதியை நேரில் சென்று வழங்கினார். மேலும், குடும்ப சூழலை கருத்தில்கொண்டு நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவிக்கு எஸ்.எம்.சுகுமார் அறிவுரை வழங்கினார். அப்போது, அதிமுக நகர செயலாளர் கே.பி.சந்தோஷம், மாவட்ட துணை செயலாளர் வேதகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்