ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காளையை நகராட்சி ஊழியர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். கடந்த சில நாட்களாக பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் சுற்றி திரிந்த காளைமாடு ஒன்று பொதுமக்களை தாக்கி வருவதாக புகார் எழுந்தது. ஏற்கனவே, தெரு நாய் கடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாட்டை, நகராட்சி ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு மூலம் பிடித்து அழைத்து சென்றனர்.