சட்டத்திற்கு புறம்பாக, போதைப்பொருள்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என இயக்குநர் மாரிசெல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 3BHK படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், போதைப்பொருள்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என தெரிவித்துள்ளார். சிறிய பட்ஜெட் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, மக்களுக்கு கனெக்ட் ஆகும் படங்கள் கட்டாயம் ஓடும் என பதில் அளித்து பேசினார்.