இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு - புதுக்கோட்டையில் பரபரப்பு

Update: 2025-03-19 04:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, கோயில் குடமுழுக்கு தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், ஆலங்குடி காவல் ஆய்வாளரின் மண்டை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கிய நிலையில், கைது செய்தவர்களை விடுவிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாடு முக்கம் பகுதியில் புதுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்