சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.. சிறுமியின் உறவினர்கள் வந்ததும் மாறிய நிலை - பரபரப்பு காட்சிகள்
புதுச்சேரியில் பாலியல் தொல்லை புகாரில் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளியை திறக்க கோரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, மறியல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளியை திறக்க கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.