புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை வழக்கில் ஒரு சிறார், பிரபல ரவுடி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சத்யாவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். இதில் ரவுடி விக்கிக்கும் ,சத்யாவிற்கும் முன்விரோதம் இருந்ததும், ரஸி, தேவா, ஆதி ஆகிய வாலிபர்களை வைத்து சத்யாவை கொல்ல விக்கி நோட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபர்கள் மூவர் வெட்டிக்கொல்லப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக, 10 பேரை போலீசார் கைது செய்து, 9 பேரை மத்திய சிறையிலும், சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சத்யாவின் அண்ணன் சங்கர் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.