பொதுத்தேர்வில் ஒழுங்கீனச் செயல்கள் - "தேர்வு எழுத வாழ்நாள் தடை".. 14 வகை தண்டனைகள் அறிவிப்பு

Update: 2025-02-26 16:12 GMT

பொதுத்தேர்வில் ஒழுங்கினச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, 14 வகை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பிட் வைத்திருந்தாலோ அல்லது விடைத்தாள் பறிமாற்றத்தில் ஈடுபட்டாலோ, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும். அச்சடித்த புத்தகங்கள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் தன் வசம் வைத்திருந்து தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தால், கண்காணிப்பாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இது போன்று 14 வகை தண்டனைகளை அறிவித்து, மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்