மழைக் காலத்தில் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனத்தில் கூடுதல் கட்டணம் வசூல் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உணவை ஆர்டர் செய்யும்போது ஏற்கெனவே 5 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில், தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய அறிவிப்பின்படி, டெலிவரி கட்டணத்திற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் கூடுதலாக 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்