காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடவாவி உற்சவத்தை ஒட்டி ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.வரும் 13-ம் தேதி சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடவாவி உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் படி நீராழி மண்டபத்தில் 20 அடி ஆழ கிணற்றிலிருந்து டீசல் பம்ப் இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் நடைபெற்று வருகிறது.