சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட மென்பொறியாளர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், மனம் திறந்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு சில வழக்குகளை, மற்ற வழக்குகள் போல எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர், இந்த வழக்கில் உண்மையான சம்பந்தப்பட்ட எதிரியை தான் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமூச்சாக பணியாற்றியதாக தெரிவித்தார்.