கப்பிள்ஸ் மட்டும் பங்கேற்ற வினோத விளையாட்டு | Pongal Games | Couples

Update: 2025-01-17 02:01 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சந்தன மாரியம்மன் கோவில் முன்பாக அமைந்துள்ள கலையரங்கு திடலில் நடைபெற்ற இந்தப் போட்டி தம்பதியினரிடையே அமோக வரவேற்பை பெற்றது. குழு மற்றும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற தம்பதியருக்கு மிகப்பெரிய அண்டா உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. திரைப்படத்தில் வருவதுபோன்று வித்தியாசமாக நடத்தப்பட்ட இப்போட்டிகள், சீலாத்திகுளம் கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்