வெடித்த அரசியல் பிரளயம் - திருச்சி சிவா பரபரப்பு அறிக்கை

Update: 2025-07-17 08:25 GMT

காமராசர் குறித்த பேச்சை விவாதப் பொருளாக்க வேண்டாம் என திருச்சி சிவா வேண்டுகோள்

காமராசர் குறித்த பேச்சை விவாதப் பொருளாக்க வேண்டாம் என, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில், தான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருவதாகவும், தான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல என்றும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்