திருச்சி மாவட்டம் காட்டூர் அரசுப் பள்ளி மைதானத்தில் மது அருந்திய விவகாரத்தில் தலைமைக் காவலர் இளையராஜாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பள்ளி மைதானத்தில் காவல்துறையினர் இரவு நேரத்தில் மது அருந்தியதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.