``புகார் தாரர்களையே சரமாரியாக தாக்கி விட்டு ஹாஸ்பிடலில் அட்மிட்டான போலீஸ் SI''
தூத்துக்குடியில் குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர், புகார்தாரர்களையே தாக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த வேல்ராஜாவின் மகன்கள் பாலா மற்றும் முனிஸ்வரன். இதில் பாலா திமுக உறுப்பினராக உள்ளார். வேல்ராஜா குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் முனீஸ்வரன் தாக்கப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாலா அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் காவு ராஜா, முறையாக விசாரிக்காமல் முனீஸ்வரனையும் புகாரளித்த பாலாவையும் தாக்கியுள்ளார். இதனால் தன் மீது புகார் எழுமோ என்ற அச்சத்தில், எஸ்.ஐ. காவு ராஜா தன்னை சகோதரர்கள் தாக்கியதாக கூறி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.