கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, மதுபோதையில் காவலர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபபுரம் அரண்மனைக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவருக்கும், அவ்வழியாக சென்ற முதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.