Tiruppur | வெளிஉலகத்திற்கு தெரியவந்த வியக்க வைக்கும் கொங்குச்சோழர்கள் `ரகசியம்’
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எல்லைகளை வரையறுக்க பயன்படும் கொங்குச்சோழர்களின் நில அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குமரலிங்கத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவிலில் ஆவணப்படுத்தப்படாத கல்வெட்டுகள் மற்றும் கொங்குச்சோழர்களின் புல்லடி கல்லிற்கான அளவீடு கண்டுபிடிக்கப்பட்டது.