Theft | பூட்டை உடைத்து 60 சவரனை ஆட்டைய போட்ட மர்ம நபர்கள் - குலதெய்வம் கோயில் சென்றவருக்கு அதிர்ச்சி
பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - விவசாயி அதிர்ச்சி
சேலம் உத்தமசோழபுரம் சூளைமேட்டில் விவசாயி சண்முகம் என்பவரது வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 60 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். குடும்பத்தினருடன் சண்முகம் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.