Police arrest || தமிழகத்திலே முதல்முறையாக யுனிபார்மோடு கைதான IPS - யார் இந்த ADGP ஜெயராம்?

Update: 2025-06-17 02:46 GMT

Police arrest || தமிழகத்திலே முதல்முறையாக யுனிபார்மோடு கைதான IPS - யார் இந்த ADGP ஜெயராம்?

ஆள் கடத்தல் வழக்கில் கைது- யார் இந்த ஜெயராம்?

ஆள் கடத்தல் வழக்கில், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே சீருடையில் ஐபிஎஸ் அதிகாரி முதல் முறையாக கைது செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஏடிஜிபி ஜெயராம், கர்நாடக மாநிலம், ராம நகரத்தைச் சேர்ந்தவர்.

கன்னட மொழியில் முதுகலை பட்டமும், வரலாற்று பாடத்தில் எம்.ஃபில் முடித்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

கர்நாடக அரசின் குரூப் பி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐபிஎஸ் கனவுடன் தனது 34 வது வயதில், UPSC தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.

தமிழக காவல்துறையில் 1996-இல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ஜெயராம், கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு, ஏ.எஸ்.பி.யாகவும், பின்னர், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் எஸ்.பி.யாகவும் பணிபுரிந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று வேலூர், தஞ்சாவூர், கோவை சரகங்களில் பணியாற்றிய ஜெயராம், சென்னை வடக்கு இணை ஆணையராகவும் பணி புரிந்துள்ளார்.

அதன் பின்பு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டலம், மத்திய மண்டலங்களிலும், அதன் பிறகு ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறையின் ஆபரேஷன், குற்ற ஆவண காப்பகங்களில் பணிபுரிந்தார்.

தற்போது ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக பணி புரிந்து வரும் இவர், அடுத்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள சூழ்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஜிபி ஜெயராம், கர்நாடக மாநிலம், ராம நகரத்தைச் சேர்ந்தவர்

கன்னட மொழியில் முதுகலை, வரலாற்று பாடத்தில் எம்.ஃபில் முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்

ஐபிஎஸ் கனவுடன் தனது 34 வது வயதில் UPSC தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆனார்

தமிழக காவல்துறையில் 1996-இல் ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்த ஜெயராம், ஏ.எஸ்.பி.யாகவும், மாவட்ட எஸ்.பி.யாகவும் பணிபுரிந்துள்ளார்

வேலூர், தஞ்சாவூர், கோவை சரகங்களிலும் டிஐஜியாகவும், சென்னை வடக்கு இணை ஆணையராகவும் பணி புரிந்துள்ளார்.

ஐ.ஜி.யாக மேற்கு மண்டலம், மத்திய மண்டலங்களிலும்,

ஏ.டி.ஜி.பி.யாக தமிழக காவல்துறையின் ஆபரேஷன், குற்ற ஆவண காப்பகங்களில் பணிபுரிந்தார்

தற்போது ஆயுதப்படை ஏடிஜிபியாக பணி புரிந்து வரும் ஜெயராம், அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், கைதாகியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்