ஆபாசமாக பேசியவர் மீது போலீஸ் ஆக்‌ஷன் - நன்றி கூறிய வெளிநாட்டு பெண்

Update: 2025-04-27 09:11 GMT

சென்னையில், வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் உரிய சில்லறை கேட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில், புகார் அளித்த உடன் நடவடிக்கை எடுத்ததாக சென்னை காவல்துறைக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், புகார் அளித்த உடனேயே திருவான்மியூர் காவல்துறை உடனே நடவடிக்கை எடுத்ததாகவும், விசாரணையில் ஆட்டோ டிரைவர் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டதால், புகாரை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்