தர்மபுரி பென்னாகரம் பகுதியில் பாமகவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரி, பாமகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடிப்பெருக்கை ஒட்டி, ஒகேனக்கல் சென்றிருந்த அமைச்சர் M.R.K பன்னீர்செல்வம், பாமக குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, பட்டக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் மந்திரி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அமைச்சருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பதிவிட்டதாக தெரிகிறது. இதுபற்றி, திமுகவினர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், மந்திரியை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் மறியலில் ஈடுபட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின் பாமக பிரமுகர் மந்திரியை போலீசார் விடுவித்தனர்.