வானில் வட்டமடித்து கோவையிலேயே இறங்கிய விமானம்..திடீர் பதற்றம் - என்ன காரணம்?
விமானநிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்
கனமழை காரணமாக கொச்சி விமானம் கோவையில் தரையிறங்கியது. துபாயில் இருந்து 184 பயணிகளுடன் கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம், மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியவில்லை. 2 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அந்த விமானம் கோவையில் தரையிறங்கியது. அங்கு தங்குமிடம், குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி பயணிகள் விமானநிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, கோவையில் இருந்து பேருந்து மூலம் பயணிகள் கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.