"மாமா.. மாமா.. காப்பாத்துங்க.." நடுரோட்டில் கணவனை சரமாரியாக தாக்கி.. மனைவியை கடத்தி சென்ற தாய்
விழுப்புரத்தில், காதல் மனைவியை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் ஒருவர் மனு அளித்துள்ளார். ஆசூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர், அதே பகுதியில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவரை காதலித்து, அவரது பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், மகாலட்சுமியின் பெற்றோர், நாகராஜின் நண்பர்களான பிரவீன், சேகருடன் சேர்ந்து, சென்னையில் இருந்த நாகராஜிடம் ஆசைவார்த்தை கூறி திண்டிவனத்திற்கு அழைத்து வந்து, நாகராஜ் மற்றும் அவரது தாயார் அம்மாச்சியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் நாகராஜ் புகார் மனு அளித்தார்.