வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள கடைகளில் காட்டு யானை ஒன்று உணவு தேடி அலையும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே கடைகள் மற்றும் பக்தர்களுக்கான தங்குமிடங்கள் உள்ள நிலையில், வனப்பகுதியில் இருந்து உணவுத் தேவைக்காக வெளியேறிய காட்டு யானை ஒன்று பேரிகார்டுகளை தள்ளிவிட்டு சுற்றித்திரியும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.