ராமேஸ்வரத்தில் செங்குத்து தூக்கு பாலத்தில் இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6ம் தேதி பிரதமர் மோடி பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தை திறந்து வைத்த நிலையில் பாலத்தில் வரும்போது இருபுறமும் கடலின் அழகையும் ரசித்ததாக ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் கடலுக்குள் , மீன்களை பார்த்து ரசித்ததாகவும், கடலுக்கு நடுவே புதிய பாலத்தில் ரயிலில் பயணித்தது போட்டிங் செய்தது போன்று இருந்ததாகவும் தெரிவித்தனர்.