மழையால் மதுரை மாவட்டம் திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காட்சியளித்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராமல் அவசர அவசரமாக தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.