பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு உண்மைக்கு புறம்பான தவறான புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருவதாக, பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், மீனம்பாக்கத்திற்கு 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணூரை விடுத்து, 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கான காரணம் என்ன? மேலும், பரந்தூர் பகுதியை போன்று விலை நிலங்கள், நீர் நிலைகள் இல்லாத பண்ணூர் பகுதியை, அரசு உயர்த்தி பிடிக்கும் மர்மம் என்ன என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.