1000-வது நாளை எட்டிய பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்

Update: 2025-04-20 09:05 GMT

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...1000-மாவது நாள் போராட்டம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 1000-மாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை பலகட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில், 1000-மாவது நாள் போராட்டத்தையொட்டி, பூவுலகு நண்பர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர்ராஜன், பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்